அமெரிக்காவுடன் நிலவி வரும் ஆயுத மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கிலான உடன்பாடுகள் தற்போது “மிகவும் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளன” என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த உடன்பாட்டின் ஒரு பகுதியாக ஹோர்முஸ் கடல்சந்தியை மீண்டும் திறப்பதும் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நீக்குவதும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் பின்னர் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அப்பாஸ் அராக்சி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(colombotimes.lk)
