22 July 2025

logo

டொமினியன் குடியரசில் 79 பேர் உயிரிழப்பு



டொமினிகன் குடியரசில் உள்ள ஒரு இரவு விடுதியின் கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் 155க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

வடக்கு மான்டே கிறிஸ்டி மாகாணத்தின் ஆளுநர் நெல்சி குரூஸும் இந்த விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஜெட் செட் இரவு விடுதியில் இசை நிகழ்ச்சியின் போது கூரை இடிந்து விழுந்தது.

எனினும், விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

(colombotimes.lk)