இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்திய Prime Marina ஆடம்பர குடியிருப்பு திட்டம் அண்மையில் பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
Prime Group மற்றும் Melwa நிறுவனங்கள் இணைந்து முன்னெடுக்கும் இந்த திட்டம், இலங்கையின் புதிய நிதி மற்றும் வணிக மையமாக உருவெடுத்து வரும் Port City Colombo பகுதியில் அமைந்துள்ளது. கடற்கரையையும் யாட் துறைமுகத்தையும் நேரடியாக எதிர்நோக்கும் இந்த இடத்தில் அறிமுக விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக, இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மிகப்பெரிய 3D அனிமேட்டட் ட்ரோன் காட்சி நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் வானில் பல்வேறு வடிவங்களை உருவாக்கியதுடன், தாமரை கோபுரமும் (Lotus Tower) Prime Marina நிறுவனத்தின் அடையாள நிறங்களில் ஒளிர்ந்தது.
மேலும், Port City பகுதி கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சியால் ஒளிமயமாக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட 1,500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் புதிய விற்பனை சாதனையை பதிவு செய்யும் வகையில், Prime Marina திட்டத்தின் 400-க்கும் அதிகமான குடியிருப்பு அலகுகள் ஏற்கனவே விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகத் தரத்திலான வசதிகளுடன் நிர்மாணிக்கப்படும் இந்த திட்டம், உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு முக்கிய முதலீட்டு வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



