கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புலதிசி நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயிலே இவ்வாறு தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் 09வது மேடைக்கு அருகில் ரயில் தடம் புரண்டதாகவும், அதை மீள தடமேற்றும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.