27 May 2026

logo

ஜயந்த சமரவீரவுக்குப் பிடியாணை



தேசிய சுதந்திர முன்னணிக்கு ஜனாதிபதி செயலகத்தால் வழங்கப்பட்ட வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் பிணையில் வெளிவந்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை, கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன இன்று (27) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதே இதற்குக் காரணம் என கூறப்டுகின்றது.

(colombotimes.lk)