நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் லபுக்கலை டொப்பாஸ் பகுதியில் குருணாகலிலிருந்து பதுளைக்கு சுற்றுலா சென்று மீண்டும் நுவரெலியா வழியாக குருநாகலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது தனியார் பேருந்து ஒன்று பிரதான வீதியை விட்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து நேற்று (23) நள்ளிரவு 11:15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 23 பயணிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 19 பெண்களும் 4 ஆண்களும் அடங்குவதாக நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரேமலால் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
(colombotimes.lk)