புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையப் புனரமைப்புப் பணிகள் இன்று (15) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகியுள்ளன.
60 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய பேருந்து நிலையம் புதுப்பிக்கப்படுகின்றது.
விமானப்படையால் மேற்கொள்ளப்படும் அதன் புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்கான மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 425 மில்லியன் ஆகும்.
இலங்கை போக்குவரத்து சபை தலைவர் ஜீவக பிரசன்ன புரசிங்க கூறுகையில், இந்தப் புனரமைப்புப் பணிகள் 8 மாத காலத்திற்கு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதுடன் இந்தப் புனரமைப்புத் திட்டம் அடுத்த ஆண்டு நிறைவடையும் என தெரிவித்துள்ளார்.
(colombotimes.lk)