24 May 2025


நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிச் சடங்கிற்கான திகதி அறிவிப்பு



இலங்கை சினிமாவின் ராணி என்று அழைக்கப்படும் மலானி பொன்சேகா இன்று (24) காலை காலமானார்.

அவர் இறக்கும் போது அவருக்கு 78 வயது.

உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மூத்த நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிச் சடங்குகள் எதிர்வரும் 26 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அரச மரியாதையுடன் நடைபெற உள்ளன.

மேலும், அவரது உடல் நாளை (25) காலை 10.00 மணிக்கு தொடங்கி பொதுமக்கள் அஞ்சலிக்காக தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன வளாகத்தில் உள்ள தரங்கணி மண்டபத்தில் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(colombotimes.lk)