மருந்து விலைகளைக் குறைக்க வேண்டியதன் அவசியம் மற்றும் அதற்கான அரசாங்கத்தின் தயாரிப்புகள் குறித்து சுகாதார அமைச்சில் சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமை தாங்கியுள்ளார்
அகில இலங்கை மருந்தக உரிமையாளர்கள் சங்கம், மருந்து முதலீட்டு வாரியம், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட மருந்துகளின் இறக்குமதி மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடலுக்கு வருகை தந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் மருந்து விலைகளைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தையும், பற்றாக்குறை இல்லாமல் மருந்து விநியோகத்தை உறுதி செய்வதையும் சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ விளக்கியுள்ளார்.
பொதுவாகப் பயன்படுத்தப்படும் பல மருந்துகளின் தற்போதைய விலைகள் மற்றும் விலைச் சூத்திரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விலைகளைக் குறைப்பது குறித்த அறிக்கையை வழங்குமாறு மருந்து முதலீட்டு வாரியத்திற்கு அமைச்சர் அறிவுறுத்தியதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் தெரிவித்துள்ளது
(colombotimes.lk)