டெங்கு நோய் அதிவேகமாகப் பரவி வருவதன் காரணமாக, வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அவற்றின் கொள்ளளவையும் மீறி அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 35,000-ஐத் தாண்டியுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது 35,000 ஐக் கடந்துள்ளதுடன், பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 19 ஆகும்.
இந்த ஆபத்து நிலைமையைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் ஜூன் 08, 09 மற்றும் 10 ஆகிய மூன்று தினங்களில் நாடு தழுவிய ரீதியில் விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாகும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(colombotimes.lk)
