21 May 2026

logo

ஜப்பானில் நிலநடுக்க எச்சரிக்கை



ஜப்பானில் மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

சுனாமி எச்சரிக்கை மீளப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக இவ்வாறு நிலநடுக்க அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

இதன்படி, அடுத்த ஒரு வார காலத்திற்குள் பாரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக ஜப்பானிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

(colombotimes.lk)