பேருவளை கடலில் மின்னல் தாக்கியதில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மற்றொரு மீனவர் காயமடைந்து பேருவளை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மரணமடைந்த மீனவர் 41 வயதுடைய மக்கோன கபுகொட பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் அவர்கள் நேற்று (06) இரவு கடலில் இருந்தபோது விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது