தற்காலிகமாக மூடப்பட்டிருந்த குவைத் வான்வெளி தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க விமானத் தளங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக IRGC பாதுகாப்புப் படை அறிவித்ததைத் தொடர்ந்து, குவைத் வான்வெளியை தற்காலிகமாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் குவைத் நோக்கி வந்த விமானங்கள் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரம் தெரிவித்துள்ளது.
நிலைமை சீரடைந்ததையடுத்து, தற்காலிகமாக மூடப்பட்டிருந்த குவைத் வான்வெளி தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
(colombotimes.lk)
