தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியை சூழவுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (27) மத்திய தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையுடன் கூடிய மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.