நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இருபதுக்கு 20 தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டியில் நியூசிலாந்து அணி 3 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
அதன்படி, நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணி நியூசிலாந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாட கேட்டுக்கொண்டது
களத்தில் இறங்கிய நியூசிலாந்து அணி 19. 3 ஓவர்களில் 108 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது
துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பாக வில் யங் 30 புள்ளிகளையும், ஜோஷ் கிளார்க்சன் 24 புள்ளிகளையும், மிட்செல் சான்ட்னர் 19 புள்ளிகளையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுக்களையும், மத்திஷ பத்திரன 3 விக்கெட்டுக்களையும், நுவான் துஷார 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19. 5 ஓவர்கள் முடிவில் 103 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக பானுக ராஜபக்ஷ 15 ஓட்டங்களையும், பதும் நிஸ்ஸங்க 52 ஓட்டங்களையும் பெற்றனர்.