27 December 2024


உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது



அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெகுன்னாவ பிரதேசத்தில் 03 நாட்டுத் தயாரிப்பு துப்பாக்கிகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அம்பன்பொல பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

 
(colombotimes.lk)