முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷவை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டது.
அவரை ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி வரை விளமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது
லஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் மற்றும் பிரதிவாதி வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.
(colombotimes.lk)
