02 June 2025


ஸ்ரீ தலதா மாளிகைக்கு வருகை தரும் வயதான யாத்ரீகர்களுக்கு சிறப்பு அறிவிப்பு



'சிறி தலதாவிற்கு வரும் பக்தர்கள், மருத்துவ ஆலோசனையுடன் மருந்துகளை எடுத்துகொள்பவர்களாக இருந்தால் , குறைந்தது 5 நாட்களுக்கு போதுமான மருந்துகளையும், மருத்துவ புத்தகத்தையும் கொண்டு வர வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொள்கிறார்கள்.

'சிறி தலதா பந்தன' வைபவத்திற்கு வரும் பக்தர்கள் தங்கள் மருத்துவ மருந்துகளை கொண்டு வருவதில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக குண்டசால பொலிஸ் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி டாக்டர் ஜனக சோமரத்ன தெரிவித்தார்.

மருந்துகளை கொண்டு செல்வதற்கு பாதுகாப்புப் படையினரிடமிருந்து எந்தத் தடையும் இல்லை என்று மருத்துவ அதிகாரி மேலும் தெரிவித்தார்.