தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 42 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.
இதன்படி, டெஸ்ட் வரலாற்றில் இலங்கை அணி பெற்ற குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக இது பதிவு செய்யப்பட்டது.
இதற்கு முன் 1994ல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 71 புள்ளிகள் பெற்றதே குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது
போட்டியில் கமிந்து மெண்டிஸ் 13 ஓட்டங்களையும் லஹிரு குமார 10 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஏனைய வீரர்களால் 10 ஓட்டங்களை கூட எட்ட முடியவில்லை எனப்து குறிப்பிடத்தக்கது .
(colombotimes.lk)