22 December 2024


SL Vs SA - 2வது டெஸ்ட்.. இலங்கை அணிக்கு 143 ஓட்டங்கள் இலக்கு



சுற்றுலா இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று (09) பிற்பகல் 1.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.

நான்காவது நாளான நேற்று (08) ஆட்டம் நிறுத்தப்பட்ட போது, ​​348 ஓட்டங்கள் வெற்றி இலக்கை துரத்திய இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஆட்டமிழக்காமல் இருந்த தனஞ்சய டி சில்வா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் தலா 39 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

முதல் இன்னிங்ஸை விளையாடிய தென்னாபிரிக்க அணி 358 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், இலங்கையால் தமது முதல் இன்னிங்ஸில் 328 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

தென்னாப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 317 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை அணிக்கு 348 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி, இலங்கை அணி இப்போட்டியில் வெற்றி பெற வேண்டுமானால்  மேலும் ௦௫ விக்கட்டுகள் கையிருப்பில்  உள்ள நிலையில்  143 ஓட்டங்கள் குவிக்க வேண்டும்

(colombotimes.lk)