18 January 2026

logo

பதவியை ராஜினாமா செய்த பிரான்ஸ் பிரதமர்



பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லு கோர்னியாக்ஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

பிரான்சுவா பேய்ரூவின் முந்தைய அரசாங்கம் சரிந்த பிறகு பதவியேற்ற 26 நாட்களுக்குள் லு கோர்னியாக்ஸ் இந்த முடிவுகளை எடுத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை லு கோர்னியாக்ஸ் ஒரு மணி நேரம் சந்தித்த பின்னர் இன்று (06) காலை எலிசி அரண்மனையில் பிரதமர் ராஜினாமா செய்துள்ளார்.