ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மேவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
குறித்த உப பொலிஸ் பரிசோதகர் கம்பஹா பிரிவின் குற்ற விசாரணை பிரிவில் பணியாற்றியவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உட்பட குற்றக் கும்பலின் ஐந்து உறுப்பினர்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றது.
(colombotimes.lk)