19 April 2025

INTERNATIONAL
POLITICAL


டிரம்ப் வரிகளில் 90 நாள் இடைநிறுத்தம்



இலங்கை உட்பட பல நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளார்.

உடனடியாக அமலுக்கு வரும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது

இருப்பினும், அமெரிக்கா சீனாவிற்கு எதிரான வரிகளை 125% ஆக உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீன இறக்குமதிகளுக்கு அமெரிக்கா நேற்று (09) முதல் 104% வரி விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கு பதிலடியாக, அமெரிக்க இறக்குமதிகள் மீது 84% வரி விதிக்க சீனா முடிவு செய்துள்ளது.

சீனாவின் முடிவுக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்கா மீண்டும் வரி விகிதத்தை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(colombotimes.lk)