22 July 2025

logo

210 மில்லியன் ரூபா பெறுமதியுடைய தங்கத்துடன் இருவர் கைது



210 மில்லியன் ரூபா பெறுமதியான 6.700 கிலோகிராம் தங்கத்தை வாகன உதிரிப்பாகங்களுக்குள் வைத்து சூட்சுமமான முறையில் கடத்திவர முயன்ற இருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

விமான நிலையத்தில் வர்த்தகர்களுக்கான 'ரக்த மாவத்தை' ஊடாக பயணித்துக்கொண்டிருந்த போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைவர் ஆவார்.

கைதான மற்றைய நபர் கண்டி, ரம்புக்வெல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

(colombotimes.lk)