மஹர மற்றும் கம்பஹா பகுதிகளில் சில இடங்களுக்கு இன்று (11) இரவு 7.00 மணி முதல் நாளை (12) காலை 7.00 மணி வரை 12 மணி நேரம் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளுடன் தொடர்புடைய நீர்க்குழாய் இடமாற்ற மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு மேற்கொள்ளப்படுகின்றது.
மஹர பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஆல்தெனிய, கோனஹேன, வேபட, சூரியபாலுவ மற்றும் உடுபில பகுதிகளில் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கம்பஹா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பரகந்தெனிய, கொஸ்சின்ன, அபரலுவ, இம்புல்கொட மற்றும் யாகொட பகுதிகளிலும் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
(colombotimes.lk)
