23 December 2024


ஜெரால்ட் கோட்சிக்கு அபராதம்



ஜோஹன்னஸ்பர்க்கில் இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியின்போது நடுவரின் முடிவில் அதிருப்தி தெரிவித்ததற்காக தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்சிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை  நடைபெற்ற இந்தப் போட்டியில் 15 ஆவது ஓவரை வீசிய கோட்சி நடுவர் ‘வைட்’ கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து முறையிட்டதாக கூறப்படுகிறது.

ஜெரால்ட் கோட்ஸி தனது குற்றத்தையும் தண்டனையையும் ஏற்றுக்கொண்டார்.

(colombotimes.lk)