சுற்றுலா இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை (27) பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இது தென்னாப்பிரிக்காவின் சஹாரா மைதானத்தில் நடைபெறவுள்ளது
இலங்கை அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வாவும், தென்னாபிரிக்க அணிக்கு டெம்பா பவுமாவும் கேப்டனாக செயற்படுகின்றனர்
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் நடைபெறும் போட்டி இந்த இரு அணிகளுக்கும், இந்திய, அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கும் மிகவும் முக்கியமானது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்க இந்த அணிகளுக்கு இடையேயான கடுமையான போட்டியே இதற்குக் காரணமாகும்.
தற்போதுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் புள்ளிகள் அட்டவணை கீழே