05 June 2026

logo

ஈரானியக் கப்பல் மீதான தாக்குதல்



ஈரானின் கார்க் தீவுக்கு எண்ணெய் ஏற்றுவதற்காகச் சென்றுகொண்டிருந்த போட்ஸ்வானா கொடி ஏற்றப்பட்ட கப்பல் ஒன்று சர்வதேச கடல் பகுதியில் தாக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் அறிவித்துள்ளது.

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக, அரபிக்கடல் வழியாக ஈரானுக்குச் செல்லும் அனைத்துக் கப்பல்களையும் தடுக்கும் முடிவுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கப்பல் ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(colobotimes.lk)