05 June 2026

logo

பாடசாலை மாணவர்களில் 20% பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு



இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களில் ஐவரில் ஒருவருக்கும் அதிகமானோர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தக் குழந்தைகள் இளம்வயதை அடையும் போது உடல் பருமன் ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

(colombotimes.lk)