02 February 2025


மேலும் பலஸ்தீன கைதிகளை விடுவிக்க தயாராகும் இஸ்ரேல்



காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் முடிவு செய்துள்ளது.

மேலும் 183 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததிலிருந்து நடைபெறும் நான்காவது கைதிகள் பரிமாற்றம் இதுவாகும்.

கடந்த வாரம், பாலஸ்தீனம் எட்டு இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவித்து, இஸ்ரேலிய காவலில் வைக்கப்பட்டிருந்த 110 பாலஸ்தீனியர்களுக்குப் பதிலாக அவர்களைப் பரிமாறிக்கொண்டதாக கூறப்படுகிறது.

 
(colombotimes.lk)