தற்போதைய நெருக்கடி நிலைமைகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க பாதுகாப்பு நெல் களஞ்சியத்தை பராமரிக்க முன்மொழிவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, நெல் கொள்வனவுக்காக 5,000 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழிவதாகவும், விவசாயம் குறித்த புதுப்பிக்கப்பட்ட தரவு மற்றும் தகவல் அமைப்பைத் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நெல் மற்றும் அரிசியை கையிருப்பில் வைப்பதை ஒழுங்குபடுத்த புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூதெரிவித்துள்ளார்.
(colombotimes.lk)