02 April 2025

INTERNATIONAL
POLITICAL


நாமலின் சட்டப் பரீட்சை குறித்து CID விசாரணை



பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சட்டக் கல்லூரிப் பரீட்சைக்கு சட்டவிரோதமான முறையில் தோற்றியதாக தெரிவிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

‘இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான குடிமக்கள் சக்தி அமைப்பு’ வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த விசாரணை இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சமூக ஊடக வலைத்தளத்தில் ஒளிபரப்பான நேர்காணல் ஒன்றில், நாமல் ராஜபக்ஷ இரண்டு சட்டத்தரணிகளின் உதவியுடன் சட்டக் கல்லூரியில் நடைபெற்ற பரீட்சையில் கலந்து கொண்டு சட்டவிரோதமாக சட்டப் பட்டம் பெற்றுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது.

அந்த அறிக்கையின் படி, இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான குடிமக்கள் சக்தி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளின் படி இது தொடர்பாக முழுமையான விசாரணையை நடத்துமாறு குற்றப் புலனாய்வு பிரிவு பணிப்பாளருக்கு பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

(colombotimes.lk)