02 April 2025

INTERNATIONAL
POLITICAL


எக்ஸ் தளம் முடங்கியதற்கு காரணத்தை கூறும் எலான் மஸ்க்



'எக்ஸ்' சமூக ஊடக தளத்தின் மீது மிகப்பெரிய சைபர் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளதாகக்
எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான X கணக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எலான் மஸ்க் தனது 'எக்ஸ்' கணக்கில் ஒரு பதிவில், இதுபோன்ற தாக்குதல்கள் ஒவ்வொரு நாளும் நடப்பதாகவும், நேற்று ஒரு பெரிய சைபர் தாக்குதல் நடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் விளைவாக, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் X சமூக ஊடக தளம் சுமார் 6 மணி நேரம் செயலிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது

(colombotimes.lk)