பொலன்னறுவை உள்ளிட்ட மகாவலி பி வலயத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடை மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் இரண்டாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாகியுள்ளன.
பொலன்னறுவை மாதுரு ஓயா மற்றும் குடுடா ஓயா பெருக்கெடுத்து ஓடுவதால் அரலகங்வில 503 பிரதேசம் உட்பட யாய 6 மற்றும் யாய 5 பிரதேசங்களில் நெற்செய்கைகள் சேதமாகியுள்ளன.
இதனால் தாங்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக மகாவலி பி வலயத்தின் 503 பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
(colombotimes.lk)