அனைத்து அரசாங்க கொடுப்பனவுகளையும் டிஜிட்டல் மயமாக்குவதைத் ஆரம்பிக்கும் வகையில் GovPay வசதி , சில நிமிடங்களுக்கு முன்பு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடியவாறு, இத்திட்டத்தின் ஊடாக அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை சீரமைத்து நவீனமயப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, டிஜிட்டல் கொடுப்பனவுகளைப் பயன்படுத்துவதன் மூலம் பொதுமக்களுக்கு மிகவும் வசதியான மற்றும் நம்பகமான சேவையை வழங்க முடியும் என்று ஜனாதிபதி கூறினார்.
GovPay சேவை இன்று (07) முதல் இணையம் மற்றும் மொபைல் வங்கி சேவைகள் மூலமாகவும், இலங்கை மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட கட்டணச் செயலிகள் மூலமாகவும் பொதுமக்கள் பயன்படுத்த முடியும்
இது தற்போது 16 அரசு நிறுவனங்களுக்கு பணம் செலுத்த உதவுகிறது, மேலும் ஏப்ரல் மாதத்திற்குள் 30 நிறுவனங்களை இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.
நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தும் ஒரு முக்கியமான படியாக டிஜிட்டல் மயமாக்கல் உள்ளது என்று ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.