02 April 2025

INTERNATIONAL
POLITICAL


இலங்கை குறித்து IMF முகாமைத்துவ பணிப்பாளர் கருத்து தெரிவிப்பு



ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கு இடையிலான online மூலமான சந்திப்பு நேற்று (07) நடைபெற்றது.

2023 மாரச் மாத்தில் ஆரம்பமான 48 மாதங்கள் நீடிக்கப்பட்ட நிதி வசதிக்கு (EFF) அமைவான ஒப்பந்தம் பகுதியளவில் நிறைவு செய்யப்பட்டிருக்கும் இந்த தருணத்தில் இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு இடையிலான ஒத்துழைப்பை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்த சந்திப்பின்போது, 2022 ஆம் ஆண்டில் முகம்கொடுத்த பொருளாதார நெருக்கடியின் போது சர்வதேச நாணய நிதியம் வழங்கிய தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். பொருளாதார மறுசீரமைப்பை செயற்படுத்தல்,பேரண்ட பொருளாதார ஸ்திரத் தன்மையை வலுப்படுத்தல், ஆபத்திற்கு உள்ளாக கூடிய தரப்பினருக்கு உதவுதல் மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்தல் உள்ளிட்ட துறைகளில் இலங்கை அடைந்திருக்கும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். கடன் மறுசீரமைப்பு செயன்முறையில் முகாமைத்துவ பணிப்பாளர், சிரேஷ்ட முகாமைத்துவம் உட்பட சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழுவினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்பையும் ஜனாதிபதி இதன்போது பாராட்டினார்.

உலக பொருளாதார ஸ்திரமற்ற தன்மைக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதாரத்தை தாங்கிக்கொள்ளும் நிலையுடையதாக மாற்றுவதற்கு இந்த தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

(colombotimes.lk)