82 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று (07) கைது செய்யப்பட்டார்.
குறித்த கைது நவகமுவ பொலீஸ்பிரிவின் படகேவத்த பகுதியில் நடை பெற்றுள்ளது
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ரனால பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
(colombotimes.lk)