02 April 2025

INTERNATIONAL
POLITICAL


எல்லை தாண்டி மீன்பிடித்த 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்



இலங்கை கடற்படை நேற்று (08) இரவு மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லையை  தாண்டி மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு இந்திய மீன்பிடி படகுகளை கைது செய்துள்ளனர்

குறித்த மீன்பிடி படகுகளில் இருந்த 14 மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்தனர்.

இந்திய மீனவர்கள் குழுவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி உதவி மீன்வள அதிகாரியிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(colombotimes.lk)