2025 IML T20 போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று (05) நடைபெற்றது.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸை விளையாடிய அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணி, ஒரு விக்கெட் இழப்பிற்கு 269 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் கேப்டன் வாட்சன் 52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 110 ரன்களும், பென் டங்க் 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 132 ரன்களும் எடுத்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியன் மாஸ்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 174 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது
அணி தலைவர் டெண்டுல்கர் 33 பந்துகளில் 64 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
அதன்படி, இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
(colombotimes.lk)