வெப்பமான வானிலை குறித்து தற்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை பேரிடர் முன்னெச்சரிக்கை மையம் எதிர்வுகூறியுள்ளது
வடக்கு, வட-மத்திய, வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பாக பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(colombotimes.lk)