03 April 2025

INTERNATIONAL
POLITICAL


நானுஓயா – பதுளை இடையிலான புதிய ரயில் சேவை இன்று முதல்



மலையகப் பாதையில் இன்று (10) முதல் எல்ல ஒடிஸி - நானுஓயா என்ற புதிய ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய ரயில் செவ்வாய்க்கிழமைகள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் நானுஓயாவிலிருந்து பதுளைக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நானுஓயாவிலிருந்து காலை 8.10 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், காலை 11.36 மணிக்கு பதுளையை சென்றடையும்.

இந்த ரயில் செவ்வாய்க்கிழமையை தவிர வாரத்தின் ஒவ்வொரு வார நாட்களிலும் காலை 8.10 க்கு நானுஓயாவிலிருந்து பதுளைக்கும் பிற்பகல் ஒரு மணிக்கு பதுளையிலிருந்து கண்டிக்கும் இயக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் தேவைக்கேற்ப ரயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

(colombotimes.lk)