02 April 2025

INTERNATIONAL
POLITICAL


நானுஓயா – பதுளை இடையிலான புதிய ரயில் சேவை ஆரம்பம்



நானுஓயாவிற்கும் பதுளை ரயில் நிலையத்திற்கும் இடையில் 'எல்ல ஒடிஸி நானுஓயா' என்ற புதிய ரயில் பாதை நாளை (10) முதல் இயக்கப்பட உள்ளது.

சுற்றுலாத்துறைக்கான அதிக தேவைக்கு பதிலளிக்கும் வகையில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப்படுமென  ரயில்வே பொது முகாமையாளர்  தம்மிக ஜெயசுந்தர தெரிவித்தார்.

இந்த ரயில் செவ்வாய்க்கிழமையை தவிர வாரத்தின் ஒவ்வொரு வார நாட்களிலும் காலை 8.10 க்கு நானுஓயாவிலிருந்து பதுளைக்கும் பிற்பகல் ஒரு மணிக்கு பதுளையிலிருந்து கண்டிக்கும் இயக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

(colombotimes.lk)