02 April 2025

INTERNATIONAL
POLITICAL


ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பணம் தொடர்பான அறிவிப்பு



ஈஸ்டர் தின தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமை குறித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைவாக, அறவிடப்பட்ட நிதியிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு 245 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (27) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்

இழப்பீடு வழங்குவதை கண்காணிக்க 12 தொடர்புடைய மனுக்கள் இன்று தலைமை நீதிபதி முர்து பெர்னாண்டோ, நீதிபதிகளான எஸ்.துரைராஜா மற்றும் ஏ.எச்.எம். டி. நவாஸ் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது

(colombotimes.lk)