மக்கள் வங்கி சமீபத்தில் தனது அடுத்த புதுப்பிக்கப்பட்ட கிளையான ஹசலாகாவை திறந்து வைத்துள்ளது.
மக்களுக்கு ஒரு நல்லதொரு வங்கி அனுபவத்தை வழங்குவதை முதன்மை நோக்காக கொண்டு ஹசலாகா கிளையின் நடவடிக்கைள் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
புதிதாக நிர்மாணிக்கபட்ட இந்த கிளையில் பண வைப்பு இயந்திரம் (CRM), வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்கவும், பணத்தை வைப்பிட செய்யவும், பில்களை பெறவும் மற்றும் பல வங்கி சேவைகளை நிர்வகிக்க முடியும் .
ஹசலாகா பிரதேச செயலாளர் ஏ. திலகரத்ன, கண்டி பிராந்திய மேலாளர் நளின் போத்தேவெல, உதவி பிராந்திய மேலாளர் பிரியங்கர குலதுங்க, ஹசலாகா கிளை முகாமையாளர் அஞ்சன குலசேகர, கண்டி பிராந்திய வணிக அதிகாரி கிருஷாந்த குலசிங்க, கிளை முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களும் பங்கேற்றுள்ளனர்.
(colombotimes.lk)