ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் நடைபெறும் 2025 உலக அரசாங்க உச்சி மாநாட்டில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (12) பிற்பகல் உரையாற்ற உள்ளார்.
எதிர்கால அரசாங்கங்களை வடிவமைத்தல் என்ற கருப்பொருளின் கீழ் இந்த மாநாடு நேற்று (11) தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த மாநாட்டில் பல உலகத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதற்கிடையில், மாநாட்டில் கலந்து கொள்ளும் பல அரச தலைவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்களை மேற்றக்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
(colombotimes.lk)