காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இன்று (18) மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளி மண்டலவியல்
திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதே வேளை , ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் நாட்டின் ஏனைய பகுதிகளில் வெப்பமான காலநிலை நிலவும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் காலை வேளையில் குளிரான காலநிலை எதிர்பார்க்கப்படுகிறது.
(colombotimes.lk)