நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடல் இன்று (27) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கும் விமானப்படையின் மூத்த அதிகாரிகளுக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கை விமானப்படையை ஒரு வலுவான விமானப்படையாக வளர்ப்பது மற்றும் இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளுக்கு ஆதரவை வழங்குவது குறித்து விரிவான கலந்துரையாடபட்டது
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இலங்கை விமானப்படைக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு மற்றும் விமானப்படையின் தற்போதைய தேவைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
(colombotimes.lk)