07 August 2025

logo
INTERNATIONAL
POLITICAL


இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு



கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை நவம்பர் 25ஆம்  திகதி ஆரம்பமாகி டிசம்பர் 20ஆம் திகதி  வரை நடைபெறும் என்று  இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலை விண்ணப்பதாரிகளின் அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணை அந்தந்த பாடசாலை அதிபருக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரிகளின் அனுமதி அட்டை மற்றும் நேர அட்டவணை தபாலில் அவர்களது தனிப்பட்ட முகவரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

தபாலில் அனுமதி அட்டைகள் கிடைக்காத தனியார் விண்ணப்பதாரர்கள், பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk மூலமாக  நவம்பர் 18 ஆம் திகதி முதல் அந்த அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
colombotimes.lk