கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 20,000 சிகரெட்டுகளை (100 அட்டைப் பெட்டிகள்) வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போதே குறித்த கைது இடம் பெற்றுள்ளது
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
(colombotimes.lk)