கந்தானை பொலிஸ் பிரிவின் நெதுருபிட்டிய பாலத்திற்கு அருகில் நேற்று (12) 75 லிட்டர் சட்டவிரோத மதுபானத்தை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழு மேற்கொண்ட சோதனையின் போதே குறித்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது .
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உஸ்வெட்டகெய்யாவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
(colombotimes.lk)